இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோகன், 3 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (09) இந்தியா சென்றுள்ளார். தலைநகர் டில்லியில் இரு நாடுகளினதும் வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
அப்போது இந்திய-இஸ்ரேல் மந்திரிகள் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
நேரடி விமான சேவைகளை அதிகரித்தல் , விவசாயம் , நீர் வழங்கள் தொடர்பில் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
கட்டடத்துறை மற்றும் தாதியர் துறைகளில் 42 000 இந்திய தொழிலாளர்களின் வருகையை அனுமதிக்கும் ஒப்பந்தங்களிலும் அமைச்சர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

