இலங்கை வரலாற்றை ஆய்வு செய்வதற்காகவிரைவில் புதிய நிறுவனம் – ஜனாதிபதி

இலங்கையின் வரலாற்றை ஆய்வு செய்வதற்காக புதிய நிறுவனம் ஒன்று விரைவில் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய அருங்காட்சியகம், ஆவணக் காப்பகத் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், கலாசார முக்கோணம், பல்கலைக்கழகங்கள் மற்றும் றோயல் ஆசிய சங்கம் என்பனவற்றை இணைத்து நிறுவி, அதற்கான சட்ட வரைவை நிறைவு செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற றோயல் ஆசிய சங்கத்தின் 178 ஆவது கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாம் பதிவு செய்துள்ள வரலாறு இந்தியாவிற்கு இல்லை. நமது மகாவம்சத்தைப் போலவே, அரசியல் விமர்சகர்களும் எழுதப்படாத வரலாற்றை ஆராய்ந்தே இந்திய வரலாற்றை விளக்குகிறார்கள். இருப்பினும், வரலாற்றுக்கு ஒரு பாரம்பரியம் உள்ளது. அந்த வரலாற்றை நாம் தொடர வேண்டும்.

இது எங்களுக்கு மிகவும் முக்கியமானது. மேலும், அந்த வரலாற்றைப் பாதுகாக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வரலாற்றை ஆராய்வதன் மூலம் வருங்கால வரலாற்றைப் பாதுகாக்கும் றோயல் ஆசிய சங்கத்தின் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டிய பணியாகும். றோயல் ஆசிய சங்கத்தின் சில சஞ்சிகைகளின் மூலப் பிரதிகளைப் படித்திருக்கிறேன்.

நான் முதலில் செய்ய விரும்புவது வரலாற்றுக்கான ஒரு கல்வி நிறுவனத்தைத் தொடங்குவதுதான். எனது பதவிக்காலம் முடிவதற்குள் இது குறித்து கலந்துரையாடி முடிவு எடுக்க வேண்டும். அதற்காக பல்கலைக்கழகங்கள், தொல்பொருள் திணைக்களம் மற்றும் றோயல் ஆசிய சங்கம் ஆகியவற்றுடன் கலந்துரையாட வேண்டிய இறுதி வரைவை நாங்கள் தயாரித்து வருகிறோம். எதிர்காலத்தில் இந்தத் துறையின் பணிகளுக்கு நிதி மற்றும் அரசாங்க ஆதரவை நாங்கள் வரலாற்று நிறுவனம் மூலம் வழங்குவோம் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *