2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க இலங்கை ஆண்கள் தேசிய கால்பந்து அணி தகுதி இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) இதனை அறிவித்துள்ளது.
முன்னதாக இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் உறுப்புரிமையை சர்வதேச கால்பந்து சம்மேளனம் தற்காலிகமாக ரத்துச் செய்த காரணமாக இலங்கை கால்பந்து அணிக்கு ஆசிய தகுதிச் சுற்று மற்றும் U23 ஆசிய கோப்பை தகுதிச் சுற்றுகளில் பங்கேற்க முடியாத காரணத்தால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

