இலங்கையுடனான கடல்சார் பொருளாதார உறவுகளை அமெரிக்கா மேலும் ஆழமாக்கவுள்ளது – சுதந்திர தினத்துக்கான செய்தியில் அன்டனி பிளிங்கென்

இலங்கையுடன் கடல்சார் பொருளாதார உறவுகளை அமெரிக்கா மேலும் ஆழமாக்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.இலங்கையின் 76வது சுதந்திரதினத்தையோட்டி இலங்கை மக்களிற்கான வாழ்த்துச்செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வலுவான கூட்டு என்பது பகிரப்பட்ட விழுமியங்கள் ஜனநாயகத்திற்கான அர்ப்பணிப்பு சுதந்திரமான வெளிப்படையான பாதுகாப்பான இந்தோ பசுபிக் போன்றவற்றை அடிப்படையாக கொண்டது என தெரிவித்துள்ள அன்டனி பிளிங்கென் எங்கள் உறவு பாதுகாப்பு ஒத்துழைப்பு பரஸ்பரம் நன்மை பயக்கும் வர்த்தகம் மற்றும் முதலீடு அத்துடன் கல்விபரிமாற்றங்கள் அறிவியல் கூட்டாண்மைகளால் வளர்க்கப்படும் மக்களிடையேயான உறவுகளை அடிப்படையாக கொண்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் வருடங்களில் இந்தோபசுபிக்கின் சகாக்கள் என்ற அடிப்படையில் நாங்கள் இலங்கையுடனான பொருளாதார கடல்சார் உறவுகளை மேலும்வலுப்படுத்துவோம் காலநிலை நெருக்கடி மற்றும் எங்களின் கரிசனைக்குரிய ஏனைய விடயங்களிற்கு தீர்வை காணமுயல்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *