சீனா சமீப காலமாக தாய்வான் கடற்பகுதியில் போர்ப்பயிற்சிகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது மஞ்சள் கடலின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள போஹாய் விரிகுடாவில் இராணுவ பயிற்சி நடத்த சீனா திட்டமிட்டுள்ளது.
அதன்படி சீனாவின் ஹெபெய் மாகாணம் டாங்ஷான் நகரில் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட நேரடி இராணுவ பயிற்சிகள் நடைபெற உள்ளது.
இந்த பயிற்சியானது இன்று திங்கட்கிழமை முதல் 14 ஆம் திகதி வரை இருக்கும் எனவும், இதனால் பயிற்சி நடைபெறும் பகுதிகளில் கப்பல்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும் கடல்சார் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

