சர்வதேச தொழிலாளர் தினமான மே தினம் இன்று திங்கட்கிழமை (மே1) கொண்டாடப்படவுள்ளது. கடந்த 2020 , 2021ஆம் ஆண்டுகளில் கொவிட் தொற்று , 2022இல் பொருளாதார நெருக்கடிகளால் மேலெழுந்த ஆர்ப்பாட்டங்கள் என்பவற்றால் மே தினக் கூட்டங்கள் சம்பிரதாய பூர்வமாக நடத்தப்படவில்லை. எனினும் இம்முறை இந்த நெருக்கடிகளிலிருந்து நாடு ஓரளவிற்கு மீண்டுள்ள நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பிரதான கட்சிகள் அவற்றின் மே தினக் கூட்டங்களை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்துள்ளன.
இந்த நிலையில் கட்சிசார்பின்மையை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி எந்தவொரு மே தின கூட்டத்திலும் கலந்துக்கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

