சீனாவின் மீன்பிடிகப்பலொன்று39 பேருடன் இந்து சமுத்திர கடற்பகுதியில் மூழ்கியுள்ளது என சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மீன்பிடிகப்பலில் இருந்தவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சீனா வெளிவிவகார அமைச்சர் இலங்கை அவுஸ்திரேலிய உட்பட பல நாடுகளை தனது தூதரகம் மூலம் கேட்டுக்கொணடுள்ளது.
குறிப்பிட்ட மீன்பிடிகப்பலில் 17 சீன பிரஜைகளும் 17 இந்தோனேசியர்களும் ஐந்து பிலிப்பைன்ஸ் பிரஜைகளும் காணப்பட்டனர் இவர்கள் காணாமல்போயுள்ளனர் என தெரிவித்துள்ள சீனாவின் சிசிடிவி இதுவரை எவரும் உயிருடன் மீட்கப்படவில்லை எனவும் செய்தி வெளியிட்டுள்ளது.
சீன ஜனாதிபதி தேடுதல் மீட்பு நடவடிக்கைகளிற்கு உத்தரவிட்டுள்ளார் என சிசிடிவி தெரிவித்துள்ளது.
லு பெங் யுவான் யூ என்ற மீன்பிடிகப்பலே விபத்துக்குள்ளாகியுள்ளது.

