கீர்த்தி சுரேசிடம் இந்தி படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழில் விஜய் நடித்த தெறி படத்தின் இந்தி ரீமேக்கில் வருண் தவான் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. இதில் நாயகியாக ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷையும் தெறி இந்தி ரீமேக்கில் நடிக்க படக்குழுவினர் அணுகி உள்ளனர்.
படத்தில் இரண்டு கதாநாயகிகள் உள்ளனர். எனவே ஜான்வி கபூர், கீர்த்தி சுரேஷ் இருவரும் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

