இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, உக்ரைன் வீராங்கனை அன்ஹெலினா கலினினா தகுதி பெற்றார். 4வது சுற்றில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் (28 வயது, 23வது ரேங்க்) உடன் நேற்று மோதிய கலினினா (26 வயது, 47வது ரேங்க்) 2-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார்.
பின்னர் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக விளையாடிய அவர் 6-2 என 2வது செட்டை கைப்பற்றி பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. அதே வேகத்துடன் 3வது செட்டிலும் மேடிசன் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்து புள்ளிகளைக் குவித்த கலினினா 2-6, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் போராடி வென்று காலிறுதிக்கு முன்னேறினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 2 மணி, 5 நிமிடத்துக்கு நீடித்தது.

