இடமாற்றத்துக்கான அறிவித்தல்களை பின்பற்றாத ஆசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்துக்கமைய பணியாற்றாத் தவறும் ஆசிரியர்களின் சம்பளம் இடை நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இடமாற்றம் வழங்கப்பட்டு;ள்ள ஆசிரியர்களுக்கு அதற்கேற்ப பணியாற்றுமாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் , எனினும் அவர்கள் அதனைப் பொருட்படுத்தாமல் முன்பிருந்த பாடசாலைகளிலே பணியாற்றுவதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் சில பாடசாலைகளில் ஆசிரியர்களின் தேவை நிமித்தம் அதிபர்களின் கோரிக்கைக்கு அமைய அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாபவும் , எனவே அவ்வாறான ஆசிரியர்களுக்கு இந்த தீர்மானம் பொறுந்தாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிகமாக ஆசிரியர்கள் காணப்படுகின்ற பாடசாலைகளிலிருந்து , ஆசிரியர் தட்டுப்பாடு காணப்படுகின்ற பாடசாலைகளுக்கு நியமனம் வழங்குவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் , நிலவும் ஆசிரியர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

