ஆஸ்திரியா மருத்துவமனையில் தீ விபத்து : 3 நோயாளிகள் பலி

ஐரோப்பிய நாடான ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவிற்கு அருகிலுள்ள மோட்லிங் நகரில் அமைந்துள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலையின் மூன்றாவது தளத்தில் பற்றிய தீ, பின்னர் கட்டிடம் முழுவதும் பரவியுள்ளது. தீ விபத்தை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 90-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

எவ்வாறிருப்பினும் துரதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் 3 நோயாளிகள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் , ஒரு பெண் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *