ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவியில் ஏற்பட்ட புயல் மற்றும் கனமழைக்கு இதுவரை 326 பேர் பலியாகினர்.
புயல் பாதிப்பு குறித்து மலாவி தேசிய பேரிடர் மேலாண்மை கூறும்போது, “பிரெட்டி புயலால் மலாவியின் தென்பகுதி மோசமாக பாதிப்படைந்துள்ளது. பல மாவட்டங்கள் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தினால் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. புயலுக்கு இதுவரை 326 பேர் பலியாகி உள்ளனர்; பலர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
புயல் பாதிப்பு குறித்து மலாவியைச் சேர்ந்த பெண் கூறும்போது, “எல்லாமே பறிபோனது. காய்கறி விற்று சிறிய அளவில் வியாபாரம் செய்து வந்தேன். எனது கணவர் 2014 ஆம் ஆண்டே இறந்துவிட்டார். இந்த கடை மூலம்தான் எனது குழந்தைகளை காப்பாற்றி வந்தேன். இந்த நிலையில் புயல் அனைத்தையும் அழித்துவிட்டது” என்று தெரிவித்தார்.

