அரிசி உற்பத்தியில் ஓராண்டு காலத்துக்குள் தன்னிறைவடைந்துள்ளோம். எனவே இனி எந்தவொரு காரணத்துக்காகவும் பாஸ்மதி தவிர்ந்து வேறு எவ்வகையான அரிசி இறக்குமதிக்கும் அனுமதி வழங்காதிருக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறையின் தேவைக்காவே பாஸ்மதி அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் , 2025இல் ஏனைய அனைத்து பயிர்செய்கைகளிலும் 80 வீதம் தன்னிறைவடைவதே அரசாங்கத்தின் இலக்காகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

