– அமெரிக்க தூதுவரிடம் எடுத்துரைத்த எதிர்க்கட்சி தலைவர்
அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையினால் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அமெரிக்கத் தூதுவர் உள்ளிட்ட குழுவினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விளக்கமளித்துள்ளார்.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பில் அவதனாம் செலுத்தி இரு தரப்பினரும் இங்கு கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறி தேர்தலை ஒத்திவைத்தல், மக்களை அடக்கி கொண்டுவர முயற்சி செய்து வரும் பல்வேறு சட்டங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

