அம்பிட்டிய சுமணரத்தன தேரர் இனமோதல்களை தூண்டுகின்றார் – தமிழ் உணர்வாளர் அமைப்பு பொலிஸில் முறைப்பாடு

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தமிழர்கள் மீதான இன வன்முறைகளை தூண்டும் விதமாக வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் முறைப்பாடு செய்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை (27) மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்குச் சென்ற தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் அம்பிட்டிய சமணரத்ன தேரர் இனங்கள், மற்றும் மதங்களை மையப்படுத்தி தெரிவிக்கும் கருத்துக்கள் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, வன்முறைகள் தோற்றம் பெறுவதற்கான ஏதுநிலைகளை தேரர் மேலும் தூண்டும் வகையில் செயற்படுவதன் காரணமாக, அவருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கோரினார்.

அதேநேரம், குறித்த தேரருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவதற்கான ஏற்பாடுகளும் அடுத்தகட்டமாக மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *