அமெரிக்க நிதி அமைச்சர் வருகையை எதிர்த்து தாய்வான் எல்லையில் 13 விமானங்களை பறக்க விட்ட சீனா

தாய்வானை தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த ஒரு பகுதி என்ற நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வரும் சீனா, வேறு எந்த நாடும் தாய்வானுடன் வர்த்தகம், தூதரக உறவுகளை மேற்கொள்ளக்கூடாது என எச்சரித்துள்ளது. ஆனால் தைவானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்துள்ளது. அடிக்கடி தனது நாட்டின் பிரதிநிதிகளை தைவானுக்கு அனுப்பி தனது ஆதரவை உறுதி செய்து வருகிறது.

அந்தவகையில் தற்போது அமெரிக்க நிதி அமைச்சர் யெல்லன் தைவானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் போது 36 ஆயிரம் கோடி மதிப்பிலான துப்பாக்கி, பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களை விற்பனை செய்ய ஒப்பந்தமிடப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாய்வான் நாட்டின் வான் மற்றும் கடல் பரப்பில் 13 விமானங்கள், 6 கப்பல்களை சீனா அனுப்பி உள்ளது.

இதற்கு பதிலடியாக சீனாவின் நடவடிக்கைகளை தாங்கள் கவனித்து வருவதாகவும், பதில் தாக்குதலுக்காக ஏவுகணைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *