அமெரிக்காவில் இராணுவ பயிற்சியின்போது ஹெலிகொப்டர்கள் நேருக்கு நேர் மோதி மூவர் பலி

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் ஹீலி என்ற இடத்தில் இராணுவத்தினர் நேற்று முன்தினம் வழக்கமான இராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது திடீரென 2 ஹெலிகொப்டர்கள் நேருக்கு நேர் மோதி கீழே விழுந்து நொறுங்கியுள்ளன.

இந்த கோர விபத்தில் ஹெலிகொப்டரில் இருந்த 2 இராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மற்றொரு வீரர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

மேலும் ஒரு இராணுவ வீரர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *