அடுத்த மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்தியாவுக்கு விஜயம்

ஜி-20 அமைப்பின் 2023-ம் ஆண்டுக்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருக்கின்ற நிலையில் , வரும் செப்டம்பர் 9, 10 ஆம் திகதிளில் புதுடில்லியில் ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.

அதற்கமைய ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க செப்டம்பர் 8ஆம் திகதி பல்வேறு நாடுகளின் தலைவர்கள் டில்லிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், வொஷிங்டனில் இருந்து செப்டம்பர் 7ஆம் விமானத்தில் புறப்பட்டு 8 ஆம் திகதி டில்லியில் தரையிறங்குவார் என தெரிவிக்கப்படுகிறது.

அவரோடு சுமார் 500-க்கும் மேற்பட்ட அமெரிக்க பிரதிநிதிகள் டில்லிக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *