
சம்பள நிர்ணய சபை கூட்டத்தில் ஜே.வி.பியின் தொழிற்சங்கம் பங்குபற்றுகிறது
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் குறித்து ஆராய்வதற்காக எதிர்வரும் 10 ஆம் திகதி சம்பள நிர்ணய சபை கூடவுள்ளது. இதுகுறித்து…
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை (2023 கல்வியாண்டுக்கான) எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி முதல் டிசம்பர் 21ஆம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். கொவிட் தொற்று அதன் பின்னர் இலங்கையில் நிலவிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளால் உயர்தர பரீட்சைகள் குறிப்பிட்ட காலத்தில் நடத்தப்படாமல் தொடர்ந்தும் தாமதமாகி வருகின்றது. இந்நிலையில் அடுத்த மாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டிய உயர்தர பரீட்சைகள் நவம்பரில் இடம்பெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளை டிசம்பரில் நடைபெற வேண்டிய…
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் குறித்து ஆராய்வதற்காக எதிர்வரும் 10 ஆம் திகதி சம்பள நிர்ணய சபை கூடவுள்ளது. இதுகுறித்து தொழிலமைச்சின் செயலாளரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்திற்கு கிடைத்துள்ளது. இதன்போது, தாம் 2000 ரூபாவாக தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்தி பிரேரணையை முன்வைக்கவுள்ளதாக அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தோழர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்துள்ளார். அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் என்பது தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்கின்றமக்கள்…
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தாக்கல் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டினுள் போலி வைத்தியர்கள் மற்றும் போலி வைத்திய நிலையங்கள் தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. போலி வைத்தியர்கள் மற்றும் மருத்துவ நிலையங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மருத்துவர்கள் மருத்துவ சபையில் பதிவு செய்திருக்க வேண்டும் என்பதோடு தனியார் மருத்துவ நிறுவனங்கள் மாகாண மட்டத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நாடளாவிய ரீதியில் பதிவு செய்யப்படாத வைத்தியர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் பல இருப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக…
திடீர் விபத்துக்களால் இலங்கையில் நாளாந்தம் 32 தொடக்கம் 35 வரையான மரணங்கள் பதிவாகின்றதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சமிதா சிறிதுங்க தெரிவித்துள்ளார். ஒவ்வோர் ஆண்டும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் திடீர் விபத்துக்களால் உயிரிழப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வாகன விபத்துக்கள், நீரில் மூழ்குதல், விஷமாகுதல் போன்ற விபத்துக்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வைத்திய நிபுணர் சமித சிறிதுங்க சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, ஏப்ரல் மாதத்தில்…
சிவ பக்தர்களுக்குரிய கவலைகள் நீங்கி, காரிய வெற்றியை தரக் கூடிய நாள் மகா சிவராத்திரி விரத நாளாகும். அந் நாளில் சிவாலயங்களில் பக்கத்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து ஓம் நமச்சியவாய என்று திரு நாமத்தை உச்சாடனம் செய்வார்கள். அவ்வாறே தமிழர்களின் மிகத் தொன்மையான வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலயத்திலும் சிவபக்தவர்கள் ஒன்று கூடி சிவபெருமானுக்கு ஆராதனைகளைச் செய்தார்கள். அந் நேரத்தில் சிவபூஜையில் கரடி போல் உள்நுழைந்த பொலிசார் அங்கிருந்த சிவபகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தி வலுக்கட்டயமாக வெளியேற்றியதோடு…
துபாய்க்கு தப்பிச் சென்ற இலங்கையின் திட்டமிட்ட குற்றவாளிகள் வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். துபாய் நாட்டிலுள்ள உள்ள குற்றவாளிகளை சர்வதேச அளவில் கைது செய்வதற்கான சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த நாட்டின் மிகக் கடுமையான குற்றவாளிகள் வேறு பெயர்களில் கடவுச்சீட்டு தயாரித்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சுயமான தீர்மானத்துக்கு அமைய பணியாளர்களின் சம்பளத்தை அதிகரித்தமை தொடர்பில் மத்திய வங்கியின் உயர் அதிகாரிகளிடம் நேற்று (05) பாராளுமன்றத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கடும் அதிருப்தி வெளியிடப்பட்டது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களின் தலைமையில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், மத்திய வங்கியின் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதற்கு முன்னர் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய கூட்டத்தில் எதிர்க்கட்சியின் முதற்கோலாசான்…
வெளிநாட்டு அரசமுறை கடன்கள் வெகுவிரைவில் மறுசீரமைக்கப்படும் என்றும் 2023 முதல் 2027 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கு கடன் செலுத்தலுக்காக காலவகாசம் பெற்றுக் கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். அத்துடன் பொருளாதாரம் ஆரம்ப கட்ட ஸ்திரப்படுத்தலில் காணப்படுகிறது என்றும் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து நிவாரணம் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தற்போது விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். பாராளுமன்றில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, புத்தகம், மருந்து…
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட, சாந்தனை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி கடிதத்தை வெள்ளிக்கிழமை (23.02.2024) அனுப்பியுள்ளது. முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் 2022-ல் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் விடுவிக்கப்பட்டாா். அதன் பின்னா், அவா் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தாா். இலங்கை தமிழரான சாந்தனுக்கு ஜன. 24-ம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அவா் திருச்சி அரசு…
தங்காலை, மாவெல்ல மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் நீராடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர். பெலியத்தை, தெமட்டாவை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே கடலில் மூழ்கி காணமல் போயுள்ளார். காணாமல் போன இளைஞனைத் தேடும் நடவடிக்கையை தங்காலை கடற்படையின் சுழியோடல் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். மாவெல்ல பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றிருந்த அவர் பலருடன் கடலில் நீராடும் போது அலையில் அள்ளுன்டு செல்லப்பட்டுக் காணாமல் போனதாக…